தேர்வு எழுத வந்த காதலியை காண பர்தா அணிந்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் கலைஞர் காலனியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ராஜ்குமார்(18).
கூலி வேலை செய்து வரும் இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று சங்கர்நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு தேர்வு எழுத வந்த காதலியை பார்க்க பர்தா அணிந்து பெண் வேடத்தில் வந்துள்ளார்.
அப்போது மாணவியை அழைத்துச்செல்ல அவரது தாயார் வந்திருந்ததால் பெண் வேடத்தில் இருந்த ராஜ்குமார் அவரை சைகையில் அழைத்துள்ளார்.
மாணவியின் தாயாருக்கு சந்தேகம் வரவே அவரை விசாரிக்கையில் அவர் பெண்ணல்ல ஆண் என்று தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் நெல்லை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


0 Comments