Subscribe Us

முதலமைச்சரின் ஊடக இணைப்பாளராக எஸ்.எல்.முனாஸ் நியமனம்

அபு அலா – 

கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளராக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட ஊடக சம்மேளன உதவிச் செயலாளர் எஸ்.எல்.முனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமணம் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (08) முதலமைச்சர் காரியாலயத்தில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பொத்தவில் பிரதேச சபை உதவித் தவிசாளரும் சுகாதார இராஜாங்க அமைச்சர் என்.ரீ.ஹஸன் அலியின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எல்.தாஜூன், முதலமைச்சரின் பிரத்தியோக செயலாளர் கே.பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments