Subscribe Us

header ads

கொழும்பில் நடைபெற்ற ஷ்ரேயா கோஷல் இசை கச்சேரிக்கு அனுசரணை வழங்கியிருந்த எலிபன்ட் ஹவுஸ்


இந்தியாவின் புகழ்பெற்ற பெண் பின்னணி பாடகியான ஷ்ரேயா கோஷல் கொழும்பில் நடத்திய மாபெரும் பாடல் நிகழ்வுக்கு எலிபன்ட் ஹவுஸ் மென்பானங்கள் மற்றும் ஜஸ் கிறீம் ஆகியன அனுசரணை வழங்கியிருந்தன.

இதன் மூலம் ரசிகர்களுக்கு தமது கரங்களில் தமக்கு விருப்பமான எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம் மற்றும் மென்பானங்களை வைத்து அருந்தியவாறே, ஷ்ரேயா கோஷல் நிகழ்வை முழுமையாக ரசித்து மகிழ்வதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. 
ஹவ்லொக் மைதானத்தில் இடம்பெற்றிருந்த ஷ்ரேயா கோஷல் நிகழ்வு, இலங்கையில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிகழ்வுகளில் பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாக அமைந்திருந்தது.
இலங்கையின் மிகவும் பிரபல்யமான மென்பொருள் மற்றும் ஐஸ்கிறீம் வர்த்தக நாமமான, எலிபன்ட் ஹவுஸ் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இணைந்து  செயலாற்றியிருந்தது.
அண்மையில் வெளியாகி இலங்கை சினிமாக்களில் அதிகளவு பிரபல்யம் பெற்றிருந்த பொலிவுட் திரைப்படமான "Devdas" படத்தின் மூலம் பிரபல்யம் பெற்ற ஷ்ரேயா கோஷல், இதனைத் தொடர்ந்து வெளியாகிய பல புகழ்பெற்ற திரைப்படங்களான  "Parineetha", "Jism", "Khakee", "Main Hoon Na", "Dhoom" மற்றும் "Paheli" ஆகியவற்றில் பல பிரபல்யமான பாடல்களை பாடியிருந்தார்.
அதுபோலவே, அவரின் பாடல் திறமை என்பது ஹிந்தி மொழி பாடல்களுக்கு அப்பால் சென்று, வங்காளம், கன்னடா, மலையாளம், தமிழ், தெலுங்கு, குஜராத், மராதி மற்றும் பஞ்சாப் ஆகிய மொழிகளிலும் பாடல்களை பாடியிருந்தார். கொழும்பில் நடைபெற்ற கச்சேரியில் இவர் சிங்கள மொழியிலும் பாடலை பாடியிருந்தார்.
ஷ்ரேயா இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகர் என்பது மட்டுமல்லாமல், Facebook இல் அதிகளவு விரும்பப்படும் 5ஆவது பிரபல்யமாகவும் திகழ்கிறார். இந்த வரிசையில் யோ யோ ஹனி சிங், நரேந்திர மோடி, சச்சின் டென்டுல்கர் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முதல் நான்கு நிலைகளில் காணப்படுகின்றனர். Twitter இலும் இவர் சுமார் 3.4 மில்லியன் பின்தொடர்வோரை கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியமை தொடர்பில் எலிபன்ட் ஹவுஸ் பான வகைகளுக்கான தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உப தலைவருமான தமிந்த கம்லத் கருத்து தெரிவிக்கையில்,
“ஸ்ரேயா கோஷல் இலங்கையில் நடத்தியிருந்த இசைக் கச்சேரி நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியிருந்தமையையிட்டு நாம் பெருமையடைகிறோம். இன்றைய இளைஞர்களுக்கு ஷ்ரேயா ஒரு முன்மாதிரியானவராக திகழ்கிறார். இதன் காரணமாக இலங்கையர்களுக்கும் ஷ்ரேயா போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்களை பார்வையிட வாய்ப்பு வழங்கியுள்ளதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.
ஆயிரக்கணக்கான எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம் மற்றும் மென் பானங்களின் ரசிகர்களுக்கு இந்த கச்சேரி நிகழ்வுகள் பெரிதும் அனுகூலம் வழங்குவதாக அமைந்திருக்கும் என நம்புகிறோம்” என்றார்.

Post a Comment

0 Comments