Subscribe Us

யேமனில் நிர்க்கதியான இலங்கையர்கள் அனைவரும் மீட்பு...


யேமனில் நிர்க்கதியாக தவித்த அனைத்து இலங்கையர்களும் நாடு திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
யேமனில் இடம்பெற்ற மோதல்களினால் 45 இலங்கையர்கள் நிர்க்கதிநிலையை அடைந்திருந்தனர். அவர்களை நாட்டிற்கு அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில் சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் குறித்த இலங்கையர்களை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்து வர முடிந்தது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த 28ம் திகதி 29 பேரும், நேற்று இரவு 16 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யேமனில் மேலும் பல இலங்கையர்கள் இருக்கின்றனர் எனவும், அவர்கள் பாதுகாப்பான பிரதேசங்களிலேயே வசித்து வருகின்றனர் எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

0 Comments