இற்றைக்கு 4 வருடங்களுக்கு முன்னர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் “புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்” எனும் 392 பக்கங்கள் கொண்ட நூலினை புத்தளத்தில் வெளியிட்டு வைத்தார். அதில் பிரதம அதிதியாக உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் கலந்து கொண்டதுடன், விஷேட உரையை கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி நிகழ்த்த, நூல் ஆய்வை அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முஹம்மத் மேற்கொண்டார்.
இந்நூலும் இதற்கு முன்னர் ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அதிகாரி மர்ஹூம் ஏ.என்.எம்.ஷாஜஹான் அவர்கள் எழுதி வெளியிட்ட “புத்தளம் வரலாறும் மரபுகளும்” எனும் நூலும் நமது முக்கிய வரலாற்று ஆவணங்கள் ஆகும். இவ்விரண்டிலும் கலந்து கொள்ள எனக்கு சந்தர்ப்பம் அல்லாஹ்வின் அருளால் கிடைத்தது. குறிப்பாக பேராசிரியர் அனஸ் அவர்கள் வெளியிட்ட நூல் தொடர்பில்
ஆரம்பம் முதலே அவர்களுடன் இணைந்து பணியாற்றக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். இந்நிலையில் அவரது “புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்” எனும் நூலின் முக்கிய அம்சங்கள் உட்பட தற்போது நமது பிரதேசத்தின் சமகால விடயங்களையும் மையப்படுத்தி ஆங்கிலத்தில் இந்நூலை வெளிக்கொணர வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளது. அதை அனஸ் அவர்கள் செய்வதற்கும் விருப்பம் கொண்டுள்ளார். அதற்கான பல பங்களிப்புக்கள் தேவைப்படுகின்றன.


0 Comments