நாடளாவிய ரீதியிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்பிற்கென தனியான விசேட பொலிஸ் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் விற்பனையினை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இப்பிரிவிலுள்ள பொலிஸாருக்கு போதைப்பொருள் சுற்றிவளைப்பு குறித்து விசேட பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்கென நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ள போதிலும் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள இந்த விசேட பிரிவே தற்போது செயற்பட்டுவருகிறது. ஏனைய பகுதிகளில் படிப்படியாக இவ்விசேட பிரிவு தனது பணிகளை ஆரம்பிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments