Subscribe Us

header ads

“இங்கு சிறுநீர் கழிக்காதீர் : அது மீண்டும் உங்களிடமே திரும்பி வரும்” (VIDEO)


சிறுநீர்கழித்தால் அதை நம்மீதே திருப்பித் தெளிக்கும் வகையிலான அதிநவீன சுவர் பூச்சு ஜெர்மனியிலுள்ள இரவு விடுதிகளின் சுவரில் பூசப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் செயிண்ட் பாலி பகுதியில் உள்ள இரவு விடுதிகளின்  சுவர்களில் பலர் சிறுநீர் கழித்து துர்நாற்றத்திற்குட்படுத்தி வருகின்றனர். 
இதை தடுக்க குறித்த விடுதி நிர்வாகம் தனது கட்டிட சுவர்களில் சிறுநீர் கழித்தால் அதை நம்மீதே திருப்பி தெளித்துவிடும் அதிநவீன சுவர் பூச்சை பூசியுள்ளனர். 
இதேவேளை குறித்த சுவர் பூச்சு பூசப்பட்ட சுவரின் அருகில் ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. 
அதில் ‘இங்கு சிறுநீர் கழிக்காதீர். அது மீண்டும் உங்களிடமே திரும்பி வரும்’ என எழுதப்பட்டுள்ளது.
குறித்த சுவர் பூச்சை அந்த விடுதியை சுற்றியுள்ள குடியிருப்புபகுதிகளிலும் குடியிருப்பாளர்கள் தங்கள் சுவர்களில் பூசியுள்ளனர். 
அதி நவீன தொழில் நுட்பம் வாய்ந்த இந்த சுவர் பூச்சை அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனத்தால் கடந்த 2012 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments