Subscribe Us

மோடி, மஹிந்த ராஜபக்சவையும் சந்திப்பார்!


இந்திய பிரதமர் நாளை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தெ ஹிந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடாகியுள்ளது.

இதற்காக ராஜபக்சää நாளை வெள்ளிக்கிழமையன்று தமது ஊரில் இருந்து கொழும்புக்கு வரவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தமையை அடுத்து அவர் பெரும்பாலும் தமது ஊரான தங்காலையிலேயே தங்கியுள்ளார்.

இந்தநிலையில் மோடியை ராஜபக்ச சந்திப்பாரா? என்று புதுடில்லியில் வைத்து இந்திய வெளியுறவு செயலாளர் எஸ் ஜெயசங்கரை செய்தியாளர்கள் கேட்டபோது, தம்மிடம் இதுகுறித்த தகவல்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments