Subscribe Us

இனி செல்பி எடுக்க கூடாது: இது பிரான்சின் உத்தரவு


பிரான்சில் உள்ள அருங்காட்சியகங்களில் செல்பி எடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 50க்கும் மேற்பட்ட அருங்காட்சியம் உள்ளது. இங்கு தினந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இங்கு வருபவர்களில் பெரும்பாலனோர் செல்பி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை அந்நாட்டு அரசு விரும்பவில்லை என கூறப்படுகிறது.

எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போது அறிக்கை ஒன்றை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தி தொடர்பாளர் கூறுகையில், இவ்வாறு செல்பி படங்கள் எடுப்பதை தடுக்க இனி எல்லா அருங்காட்சியகத்தின் வாசலிலும், உள்ளேயும் பாதுகாப்பு பணியில் பொலிசார் ஈடுபடுவர்.

ஏனெனில் செல்பி குச்சிகளை வைத்து கொண்டு வருபவர்கள் மற்றவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்

எனவே இனி செல்பி எடுக்க வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் பிரான்சின் பழங்கால சின்னங்களை பாதுகாக்கும் நோக்கத்திலேயே இவ்வாறு ஒரு முடிவெடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments