Subscribe Us

header ads

அரசியலில் ஈடுபடுவதில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது - சனத் ஜயசூரிய


மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என முன்னாள் பிரதி தபால் அமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் இன்று 18-03-2015 தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடக் கூடிய சாத்தியங்கள் கிடையாது. செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நான் நினைக்கவில்லை நான் மீண்டும் அரசியலில் களமிறங்குவேன் என.

தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாட்டுக்கு சேவையாற்றுவதனை மகிழ்ச்சியாக கருதுகின்றேன்.இவ்வளவு தூரம் இலங்கை கிரிக்கெட் அணி இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் பயணித்தமை மகிழ்ச்சி அளிக்கின்றது.

இன்னும் முன்னேற்றமடைய இடமுண்டு. அவ்வாறு முன்னேறினால் அரசியலில் ஈடுபடுவதனை விடவும் அதிக மகிழ்ச்சி ஏற்படும் என சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments