Subscribe Us

ஆராச்சிக்கட்டுப் பிரதேச சபைக்குட்பட்ட ஆனைவிழுந்தாவப் பகுதியில் பிக்குகள் போராட்டம்

புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டுப் பிரதேச சபைக்குட்பட்ட ஆனைவிழுந்தாவப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுக் கூரைத் தகடு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தடுத்து நிறுத்துமாறு கோரி தொழிற்சாலைக்கு முன்னால் நேற்று முதல் உண்ணாவிரதப் போரட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட பொது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாகவும்,
எனவே இந்த தொழிற்சாலையின் செயற்பாடுகளை நிறுத்தும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Peku

Post a Comment

0 Comments