Subscribe Us

நிமால் சிறிபால டி சில்வாவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது!– அனுரகுமார


நிமால் சிறிபால டி சில்வாவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.

தேசிய ஒளடத கொள்கை தொடர்பிலான திருத்தங்களை அனுரகுமார திஸாநாயக்க முன்வைத்த போது அந்த திருத்தங்களை வேறும் ஓர் நாளில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இணங்கப்பட்டதற்கு அமைய தற்போது சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வோம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் போது, உங்களை எம்மால் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என அனுரகுமார திஸாநாயக்கää நிமால் சிறிபால டி சில்வாவிடம் தெரிவித்துள்ளார்.

நாம் நேரடியாக சுகாதார அமைச்சருடனேயே பேசி தீர்த்துக் கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியினாலேயே எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார் என ஏற்கனவே அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments