Subscribe Us

header ads

கொழும்பில் சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - நாமலும் பங்கேற்பு


மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை பதவிவிலகுமாறு வலியுறுத்தி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, ஜனக்க பண்டார தென்னக்கோன் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.  

மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் அவரை விடுமுறையில் வீட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

Post a Comment

0 Comments