Subscribe Us

header ads

கிழக்கு மாகாண சபை அமைச்சரவை கூட்டம்


கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக்கூட்டம் நேற்று 11.03.2015. மாலை 5 மணிக்கு முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தலமையில் கூடியது.

கடந்த 4 மாதங்களின் பின்னர் புதிய அமைச்சர்களான  சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி, விவசாய அமைச்சர் துரை ராஜசிங்கம் ஆகிய 4 அமைச்சர்களுடன் கூடிய அமைச்சரவை சுமார் 3 மணி நேரங்கள் தொடற்சியாக இடம்பெற்றது.

மாகாண சபையின் அடுத்த அமர்வு கிழக்கு மாகாண சபையின் ஆளுணரின் கோரிக்கைக்கைக்கு மைவாக எதிர்வரும் 16.03.2015 திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் குறிப்பிட்டார்.

முதலமைச்சரின் ஊடகப்பிரிவு.

Post a Comment

0 Comments