Subscribe Us

header ads

மகிந்தவை மீண்டும் கொண்டுவர, முயற்சிப்பவர்களின் மூளைகளை பரிசோதிக்க வேண்டும் - ரோசி


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலம் முடிந்துவிட்டது,அவரால் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான திறன் இல்லை என சிறுவர் விவகாரங்களுக்கான இராஜங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வர முயற்சிப்பவர்களின் மூளைகளை உடனடியாக பரிசோதிக்க வேண்டும்.

ஏன் என்றால் மகிந்த தற்பொழுது காலாவதியாகிவிட்டார். மகிந்தவை இனி விற்பனை செய்ய முடியாது. நான்கு, ஐந்து பேர் அவருக்கு ஆதரவாக கூச்சலிடுவதனால் மகிந்தவால் மீண்டும் அதிகாரத்திற்கு வரமுடியாது.

100 நாட்களில் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தவற்றில் இன்று 100ற்கு 75 வீதம் நிறைவேற்றியுள்ளோம் என சிறுவர் விவகாரங்களுக்காக இராஜங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments