இலங்கைக்கான இந்திய தூதுவர் சுஷ்மா சுவராஜை இன்று கொழும்பு தாஜ் சமுத்ரா கோட்டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழு சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்தியது.
மேற்படி சந்திப்பில் ஸ்ரீ.மு.கா. தலைவர் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி, கட்சியின் பிரதித் தலைவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் நேற்று மாலை 3.40 க்கு சந்தித்து பல விடையங்களை பரிமாறிக்கொண்டனர்.
இச்சந்திப்பின்போது வட மாகாணம் இந்திய அரசால் எவ்வாறு கவனிக்கப்படுகிறதோ அதுபோன்றே கிழக்கு மாகாணத்திலும் தமிழ், முஸ்லிம் மக்களை இந்தியா கவனிக்கும் என்று இந்திய தூதுவர் தெரிவித்தார்.
கிழக்கில் அமைந்துள்ள ஆட்சி சம்மந்தமாகவும் விரிவாகப்பேசப்பட்டதுடன்
இலங்கைக்கு எதிர்வரும் 13ஆம் திகதி வருகை தரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் விபரம் பற்றியும் ஆராய்ந்தனர்.




0 Comments