Subscribe Us

header ads

சாதனைச் சக்கரவர்த்தி சங்கக்கார....


இலங்கையின் கிரிக்கட் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார உலகக் கிண்ணத்துக்கான கிரிக்கட் போட்டி வரலாற்றில் சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். 

தொடராக மூன்று உலகக் கிண்ணத்துக்கான கிரிக்கட் போடிகளில் சதம் (100) ஓட்டங்களைப்பெற்ற முதலாவது ஆட்டக்காரர் என்ற சாதனையின் மூலம் உலகக் கிண்ண கிரிக்கட் வரலாற்றில் சங்கக்கார பதியப்படுகின்றார்.
நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கட் ஆட்டத்தொடரில், முறையே பெப்ரவரி 26-ம் திகதி பங்களாதேஷுக்கு எதிராக 105 ஓட்டம், மார்ச் 01-ம் திகதி இங்கிலாந்துக்கு எதிராக 117, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 104 ஓட்டம் என தனது சாதனை வரலாற்றைப் படைத்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெற்ற 39-வது ஓட்டத்துடன், ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களைப் பெற்ற சாதனையாளர் வரிசையில் இரண்டாம் இடத்தையும் தனதாக்கிக்கொண்டார்.
மூலம்: ලංකාදීප லங்காதீப
தமிழில்:Hisham Hussein

Post a Comment

0 Comments