Subscribe Us

header ads

பேஸ்புக்கில் நிச்சயதார்த்த போட்டோ போட்ட இளைஞர்: பலாத்கார வழக்கில் கைது


பேஸ்புக்கில் தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட இளைஞர் மீது அவரது முன்னாள் காதலி பலாத்கார வழக்குத் தொடுத்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிகோடு மாவட்டம் கோராஷந்து பகுதியை சேர்ந்த இளைஞர் ஷமீர் என்பவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள‌து.

இதையடுத்து அவர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை நண்பர்கள் பார்ப்பதற்காக பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில் பேஸ்புக்கில் ஷமீரின் புகைப்படங்களைப் பார்த்த அவரது முன்னாள் காதலி உடனடியாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அதில், ஷமீர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டார்' என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசார் இந்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376-ன் படி பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்து ஷமீரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments