Subscribe Us

மகிந்த ராஜபக்ச செய்த வியாபாரம்- வெளிவரும் உண்மைகள்



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நுகேகொடை மிரிஹான பிட்டியில் உள்ள வீட்டு பதிவு விலாசத்தில் நிறுவனம் ஒன்று நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த நிறுவனம் ஜெஸ்மி கொன்சொலிடேடட் என்ற பதிவில் நிறுவப்பட்டுள்ளது.  மகிந்த ராஜபக்சவின் சகோதரியின் மகன் ஹிமால் லலிந்திர ஹெட்டி ஆராச்சி அவ் நிறுவனத்தின் இயக்குனராக செயற்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தில் இருந்து மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவிற்கு கடனாக  15,773.056  ரூபாய் 2012ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு அவர்களின் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு  25,275.000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
செஸி என்ற ஸ்தாபனத்திற்கு 9,970.133.50 ரூபாயும் இன்னும் ஒரு ஸ்தாபனமான சிலிரா சொலிஸ்சன் 7.708.018.11  கடனாக வழங்கியிருப்பதாகவும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வியாபாரம் வடக்கு கிழக்கு மாகாணத்தை முக்கியப்படுத்தி டயலொக் உற்பத்திகளை விநியோகிக்கும் முகவராக செயல்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments