Subscribe Us

header ads

யுவதி பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை: ராஜித சேனாரட்ன


தமது வயது குறைந்த மகளை அமைச்சர் ராஜித சேனாரட்னவின் மகன் கடத்திச் சென்றதாக தாய் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
தமது மகளை அமைச்சரின் மகன் கடத்திச் சென்றமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தாய் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சருக்கும் அவருடைய மனைவிக்கும் தெரியும் என்று தாய் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மகளின் தந்தையும் ராஜித சேனாரட்னவும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவதி பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை: ராஜித சேனாரட்ன
சிறுமி ஒருவரை பலவந்தமான முறையில் தமது மகன் தடுத்து வைத்திருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
எனது மகனின் பெயரைப் பயன்படுத்தி சேறு பூசல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் இதனை விடவும் அதிகளவில் சேறு பூசல்கள் இடம்பெறக்கூடும்.
நல்ல பெற்றோர் இவ்வாறான விடயங்களை ஊடக சந்திப்புக்களை கூட்டி மக்களுக்கு வெளிப்படுத்த மாட்டார்கள்.
சேறுபூசல் தொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
குறித்த யுவதி பலவந்தமான அடிப்படையில் தடுத்து வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த யுவதி தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெறும் போதும் அவரது வயது 16 வயது 11 மாதங்களாகும்.
16 வயதைத் தாண்டிய யுவதி ஒருவர் தனக்கு விரும்பிய தீர்மானத்தை எடுக்க சட்டத்தில் இடமுண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார அமைச்சரின் மகன் எக்சத் சேனாரட்ன தமது மகளான திலினி ஆலோகா என்ற சிறுமியை பலவந்தமாக கடத்திச் சென்று தடுத்து வைத்திருப்பதாக அவரது பெற்றோர்களான காமினி ரணசிங்க மற்றும் தமினி ரொட்ரிகோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24ம் திகதி இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தம்மை கொன்றாலும் நீதிக்காக போராடப் போவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments