Subscribe Us

இஸ்லாம் பிள்ளை பெறுவதை விடவும் அதிகாமாக பிள்ளைகளை வளர்ப்பது எவ்வாறு என்பதை அழகாகவும், ஆழமாகவும் பல இடங்களில் சொல்லி உள்ளது...



நம்மில் பலருக்கும் பல பிள்ளைகள் இருப்பதை நாம் காண்கிறோம். நமது மார்க்கம் சந்ததிகளை அதிகரிக்கும் படி சொல்லி இருப்பது உண்மை, இதன் படியே பிள்ளைகளை அதிகம் பெறுவதாக நம்மில் பலர் கூறுகின்றனர்...
அதாவது, தங்களின் உடல் இச்சைகளை தீர்த்து கொண்டோம் என்பதற்கு அப்பால் இஸ்லாம் சொல்லிய ஒரு கட்டளையை நிறைவேற்றினோம் என்று குர் ஆன் , ஹதீஸ் வழியிலேயே பிள்ளை பெறுவதை பலர் நிறுவ முற்படுகின்றனர்...
இதிலே தான் பலர் கோட்டை விடுவதை நாம் காண்கிறோம், பெற்று கொள்வதற்கு பேசும் இஸ்லாம் , வளர்தேடுப்பதிலே எங்கே போனது என்பதே மிக பெரிய கேள்விக்குறியாகும்...
இதே இஸ்லாம் பிள்ளை பெறுவதை விடவும் அதிகாமாக பிள்ளைகளை வளர்ப்பது எவ்வாறு என்பதை அழகாகவும், ஆழமாகவும் பல இடங்களில் சொல்லி உள்ளது...
சாப்பாடு போடுதல், உடு துணி வாங்கி கொடுத்தல் என்பதற்கும் அப்பால் ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளும், செய்ய வேண்டிய கடமைகளும் நிறையவே இருக்கின்றன. இதில் நம்மில் எத்தனை பேர் மன சாட்சியோடு நடக்கிறார்கள்...
சாபிட்டாயா ? தூங்கினாயா ? என்று வினவுவதற்கு அப்பால் உன் இலட்சியம் என்ன? நீ எதை படிக்க விரும்புகிறாய்? என்ன தொழில் புரிய விரும்புகிறாய்? பணி புரியும் இடத்தில் உனக்கு உள்ள கஷ்டங்கள் என்ன?... இப்படியெல்லாம் பிள்ளைகளுடன் கேற்கும் பெற்றோர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்...?
ஆக, பத்து பிள்ளை பெற்று சீரழிப்பதை விடவும், ஒன்றாய் இருந்தாலும் பத்துக்கு சமமாய் வளர்ப்பது சிறந்தது, இதையே இஸ்லாமும் விரும்புகிறது...
இந்த விடயத்தில் நான் அவதானித்த வகையில் பெரும்பான்மை சமூகம் ஒரு நல்ல நிலையில் இருப்பதை காண முடிகிறது.. அவர்களின் குடும்பங்களில் மூன்று, நான்கு பிள்ளைகளுக்கு மேல் இருக்க மாட்டார்கள். ஆனால் , இருக்கும் பிள்ளைகளையும் இலட்சியங்களையும், முறையான ஆசைகளையும் ஊட்டியே வளர்க்கிறார்கள். அவர்களின் முன்னேற்றத்தில் பங்கு கொள்கிறார்கள்..
-Mohamed Infas-

Post a Comment

0 Comments