Subscribe Us

வீடு விற்பனை; மனைவி இலவசம்


இந்­தோ­னே­சி­யாவில் பெண்­ணொ­ருவர், 'வீடு விற்­பனை; மனைவி இல­வசம்' என புது­மை­யான முறையில் இணை­யத்­த­ளத்தில் திரு­மண விளம்­பரம் செய்து பெரும் சர்ச்­சையை தோற்­று­வித்­துள்ளார்.

தனக்கு பொருத்­த­மான மண­மகன் ஒரு­வரை தேடும் முக­மா­கவே கண­வனை இழந்த 40 வய­தான வினா லியா என்ற மேற்­படி பெண் இவ்­வாறு விளம்­பரம் செய்­துள்ளார்.

வீடு மற்றும் சொத்து விளம்­ப­ரத்­திற்கு பிர­சித்தி பெற்ற கஸ்கஸ் இணை­யத்­த­ளத்தில் வெளியிடப்பட்ட அந்த விளம்பரத்தில், 'இரு படுக்­கை­ய­றைகள், இரு குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பிட வசதி மற்றும் மீன் தடாகம் என்­ப­வற்­று­ட­னான வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. வீட்டை வாங்­கு­ப­வ­ரிடம் அதன் உரி­மை­யாளர் உங்­களை திரு­மணம் செய்­வ­தற்கு கோர முடியும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜாவா தீவி­லுள்ள மேற்­படி வீட்டின் விலை 999 மில்­லியன் ரூபா (சுமார் 75000 அமெ­ரிக்க டொலர்) என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
கணவன் மர­ண­மா­ன­தை­ய­டுத்து இரு பிள்­ளை­க­ளுடன் வாழ்ந்த அவர், திரு­மணம் செய்யும் நோக்கில் விற்­பனை முக­வ­ராக பணி­யாற்றும் தனது நண்­பரை அணுகி, தான் திரு­ம­ண­மா­காத அல்­லது மனை­வியை இழந்த ஒரு­வ­ருக்கு வீட்டை விற்று அவ­ரையே திரு­மணம் செய்து கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.
ஆனால் அந்த நண்­பரோ ஒரு சில­ருக்கு மட்டும் பரி­மா­றப்­பட எதிர்­பார்க்­கப்­பட்ட தக­வலை இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட்­டுள்ளார்.

இந்­நி­லையில் மேற்­படி விளம்­பரம் தொடர்பில் விண்­ணப்­பித்­த­வர்­களில் ஒரு­வரை மட்­டுமே தான் சந்திக்க ஒப்புக்கொண்டு புதன்கிழமை சந்தித்ததாக தெரிவித்த வினா லியா, அது தொடர்பில் மேலதிக தகவலை வெளியிட மறுத்துள்ளார்.

Post a Comment

0 Comments