தாடி வைத்துள்ளவர்களை பற்றி கணக்கெடுக்குமாறு பெல்ஜியம் அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ராச்சிட் மாட்ரேன் (Rachid Madren) என்ற அமைச்சர், கைதிகளின் ஜாமீன், நல்வாழ்வு ஆகிய விவகாரங்களை கவனித்து வரும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தாடி வைத்தல் மட்டுமின்றி, குரானிலுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி ஆடைகள் அணிவது, பெண்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்ப்பது, கேளிக்கைகளைத் தவிர்ப்பது ஆகிய மாற்றங்கள் குறித்தும் விவரங்களைச் சேகரிக்குமாறு அந்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


0 Comments