பஞ்சிகாவத்தை பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 9 யுவதிகளை, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த விபச்சார விடுதியை நடத்தி வந்ததாக கூறப்படும் நபரொருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள், கிரான்பாஸ், ராகமை, தெவிநுவர, தலங்கம, சீதுவ, வெலிமடை, பியகமை,கொழும்பு-12, கொழும்பு-14 மற்றும் பேலியகொட ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


0 Comments