Subscribe Us

header ads

14,000 ஓட்டங்களைக் கடந்தார் சங்கா



இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார சற்று முன்னர் ஒருநாள் போட்டிகளில் 14,000 ஓட்டங்களைக் கடந்துள்ளார். 

உலகக் கிண்ண லீக் போட்டிகளில் 32வது போட்டியாக இன்று அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 

சிட்னியில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 376 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இதன்படி 377 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Post a Comment

0 Comments