Subscribe Us

பிரித்தானியா சாலைகளில் “தானியங்கி கார்கள்” ஓடத் தொடங்கியது (VIDEO)

பிரித்தானியாவில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்கள் நேற்று முதல் ஓடத் தொடங்கியுள்ளது.

பிரித்தானியாவின் கிரீன்விச்(Greenwich) பகுதியின் நடைபாதையில் இவ்வகை கார்கள் செல்கிறது.

மின்சார உதவியினால் இயங்கும் இந்த கார்கள் மணிக்கு 12 மைல் தொலைவிற்கு செல்லும் திறன் கொண்டது.

இரண்டு இருக்கைகள் கொண்ட இவ்வகை கார்கள் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்ஸ் காடாபுல்ட்டால்(Transport Systems Catapult) வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை நடைபாதை மற்றும் ஏனைய பாதசாரி பகுதிகளில் இயக்கப்படுகிறது.

மேலும் சென்சார், ரேடார் மற்றும் கமெரா ஆகியவை கொண்டு தடைகள் தவிர்க்கப்படுகிறது.

குறைந்த தூரம் வரையில் பயணம் செய்யும் மக்களுக்கு இவ்வகை கார்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டது என்றால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து நகரங்களிலும் முற்றிலுமாக தானியங்கி வாகனங்கள் உருண்டோடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments