Subscribe Us

ஏன் ஹோம்வர்க் பண்ணவில்லை? மாணவர்களை படுக்கவைத்து பந்தாடிய கொடூர ஆசிரியை (VIDEO)


ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டில் வீட்டு பாடம் செய்யாத மாணவர்களின் முதுகின் மீது ஏறி நின்ற ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கானாவின் மேற்கு பகுதியில் உள்ளது வாசா அக்ரோபாங்(Wassa Akropong) என்ற இடத்தில் உள்ள பல்துறை கல்வி வளாகத்தில் கிறிஸ்டினா ஒவுசு(Christiana Owusu) என்ற பெண் ஆசிரியையாக பணிபுரிகிறார்.

இவரது வகுப்பில் 2 மாணவர்கள் வீட்டுப் பாடம் செய்ய மறந்துள்ளனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த அவர் மாணவர்களை படுக்க வைத்து அவர்கள் மீது ஏறி அவர்கள் இருவரின் முதுகில் சரமாரியாக மிதித்து உள்ளார்.

மேலும் இதேபோல் ஒருமுறை அந்த மாணவர்கள் மீது ஏறி மிதித்து, அவர்களை கீழே தள்ளிவிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இந்த காட்சி பக்கத்து அறையில் இருந்த நபரால் வீடியோ எடுக்கப்பட்டு இணையதளத்தில் வெளியானதையடுத்து, ஆசிரியைக்கு தற்போது பிரச்சனை எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments