வீடியோ, மாகாண சபை உறுப்பினர் தவத்துடனன நேர்கானல்:-
கிழக்கு மாகாண சபையில் அதிகூடிய விருப்பு வாக்குகளான 33000 விருப்பு வாக்குகளை பெற்றதும் மட்டுமல்லாமல் சகோதரர் ஜெமீலை விடவும் தான் பெற்ற விருப்பு வாக்குகள் கூடுதலாகும். அந்த வகையில் முதலமைச்சுப் பதவி விருப்பு வாக்கடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்குமானால் எனக்குத்தான் தரப்பட்டிருக்க வேண்டும் என்பது ஒரு புறமிருக்க, சென்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சிராஸ் மீராசாஹிப்பும், சட்டத்தரனி நிசாம் காரியப்பரும் போட்டியிட்டனர். ஆனால் கட்சியின் தலமையானது சாந்தமருக்கோ அல்லது கல்முனைக்கோ மேயர் பதவி தருவதாக வாக்குறுதி கொடுக்கவில்லை. மாறாக அதிகூடிய விருப்புவாக்குகளை பெறுபவர் முதல்கட்டமாக இரண்டரை வருடங்கள் மேயர் பதவிய வகிக்க முடியும் என்பதாகவும் அதற்குப் பிறபாடு அடுத்த இரண்டரை வருடங்கள் இரண்டாவதாக விருப்பு வாக்குகளை பெறுபவர் மேயர் கதிரையில் உட்கார முடியும் என்ற வாக்குறுதியை அளிக்கப்படதே தவிர இரண்டு ஊர்களுடைய பிரச்சனை கிடையாது.
அந்த வகையில் கட்சி என்ற விடயம் இருப்பதனால் கட்சியும் தலைமையும் எடுக்கின்ற முடிவில் சாதகமான விடயத்தை எதிர்பாக்கலாம் என்ற அடிப்படையில் அதனை ஏற்றுக்கொள்வதற்குறிய மனப்பக்குவம் எல்லோருக்கும் இருத்தல் அவசியமாகும். சகோதரர் ஜெமீல் அவர்களிடம் சிறிது தடுமாற்றம் இருந்தது. ஆனால் தற்போது அவர் தடுமாற்றத்தினை விளங்கியவராக பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார். அதனடிப்படையில் மீண்டும் அந்த பிரச்சனைகளை கிளறிக் கொண்டு பிரச்சனையாக வெளியில் காட்டுவதற்கு நாங்களும் கட்சியும் அனுமதிக்கப் போவதில்லை எனவும்இ சிறிய பிரச்சனையான அந்த பிரச்சனை பூதாகரமாக வெளியில் காட்ட முட்படுவதானது இன்னுமொரு அரசியல் நோக்கமே தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. ஜெமீல் அவர்களுக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி தருவதாக வாக்குகுறுதி அளிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டது சம்பந்தமாகவும் கட்சியின் தலைமையினால் சாய்ந்தமருது பிரதேசம் புறக்கணிக்கப்படுவது சம்பந்தமாக கேட்கப்பட கேள்விகளுக்கு இணைய நாளிதல் வாசகர்களுக்காக பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு மாகாணா சபை உறுப்பினர் தவம் தெரிவித்தார். மேலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கன பதில்களும் பதில்களுக்கான விலாவாரியான காணொளியும் எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அஹமட் இர்ஸாட்:- கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சு பதவி கொடுக்கப்பட்டதனால் அரசியல் ரீதியாக தளம்பல் நிலையே காணப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூட உங்களுடன் பொதுவான உடன்பாட்டுக் கருத்துடன் இல்லாமல் வேறுபட்ட கருத்துடனே உள்ளனர். ஆகவே எதிர்காலத்தில் இந்த முதலமைச்சு பதவிக்கு பிற்பாடு தமிழ் சமூகமும் முஸ்லிம் எவ்வாறான உறவைப் பேணிக்கொள்ளப் போகின்றது?
உறுப்பினர் தவம்:- இப்படியான விடயங்கள் கடந்த வாரத்தில் இருந்திருக்கலாம். நேற்று முந்தினம் தமிழரசுக் கட்சியுடன் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்திக் கொண்ட பேச்சுவார்த்தையின் படி ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டு இன்று கிழக்கு மாகாண சபையிலே சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்துக்கு பூரண ஆதரவு வழங்கியுள்ளமையும், சிங்கள, முஸ்லிம், தமிழ் சமூகங்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக வரவுசெலவுத்திட்டத்துக்கு வாக்களித்தமையானது இதற்குப் பிறகு கிழக்கு மாகணத்திலே மூன்று சமூகமும் சேர்ந்து வாழ்வதற்குறிய சமன்பாடு உறுவாகியுள்ளதது என்பதற்குறிய சிறந்த உதாரணமாகும்.
அந்த வகையில் இனமுறன்பாடு ஏற்படுவதற்குறிய எந்த சந்தேகமும் இல்லை அரசியல் ரீதியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பாக இருந்தாலும் சரி முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இருந்தாலும் சரி சில கருத்துக்களை வெளியிடும் போது மாற்றுக் கருத்துக்களுக்கு ஒப்பான கருத்துக்களை தெரிவிப்பதனை அரசியல் சார்ந்த விடயங்களாக பார்க்கப்பட வேண்டுமே தவிர இரண்டு இனங்களுக்கிடையில் பிரச்சனைகளை தோற்றுவிக்கின்ற கருத்தாக நோக்கக் கூடாது என்பதே தனது தாழ்மையான கருத்தாகவும் உண்மையான நிலைப்பாடாகவும் உள்ளது.
அஹமட் இர்ஸாட்:- சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பமானது அம்பாறை மாவட்டத்தில் இருந்து என்பது ஒரு புறமிருக்க .இ கட்சியின் தலைவர் மட்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏராவூருக்கே மிக முக்கியமான பதவிகளை கொடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டு பரவலாக மக்கள் மத்தியில் எழுகின்றது இது சம்பந்தமான உங்களுடைய கருத்து என்ன?
உறுப்பினர் தவம்:- மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் அதிகாரம் இருக்கின்ற ஒரே ஊராக நான் ஏராவூரையே பார்கின்றேன். அந்த வகையில் அங்கேதான் இரண்டு பிரதிநிதிகள் உள்ளனர். அதாவது முன்னால் அமைச்சர் பசீர் சேகுதாவூத்தும்இ தற்போதைய முதலமைச்சர் நசீர் அஹமட்டும். ஆகவே மட்டக்களப்பை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் அங்கிருந்துதான் தொடங்கப்பட வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்கின்றது என்பது உண்மையாகவும், நியாயமாகவும் இருக்கின்றது. அதிலும் அம்பாறை மாவட்டமானது அதிகளவில் அரசியல் அதிகாரத்திலும், கூடிய அரசியல் பிரதி நிதிகளையும் கொண்டுள்ள படியினால் ஏனைய மாவட்டங்களை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. ஆகவே அதனடிப்படையில் அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்கும் கடமை கட்சிக்கு இருக்கின்றது அதனடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்துக்கு முதலமைச்சரும், திருகோணமலை மாவட்டத்துக்கு பிரதி அமைச்சரும், அம்பாரை மாவட்டத்துக்கு இராஜாங்க அமைச்சரும் என அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதில் பிராந்திய வாதம் பார்க்கப்படுவதானது எங்களுடைய கட்சி பிரமுகர்களினால் பார்க்கப்படுகின்ற விடயமல்ல. மாறாக தனிப்பட்ட ஒருவரினால் தனக்கு தேவைப்படுகின்ற முதலமைச்சர் பதவி சம்பந்தமாக உருவாக்கப்பட்ட வாதமாக கட்சி போராலிகளினால் பார்கப்படுகின்ற அதே நேரம்., இதனை பெரிதுபடுத்துவது எங்களுக்கு எதிராக செயற்படுகின்றவர்களாக இருகின்றவர்களும் ஏற்கனே தோல்வியுற்றிருக்கின்ற முன்னால் அமைச்சர் அதாவுலாவின் அணியினரும், அரசாங்கத்துடன் இருக்கின்ற அமைச்சர் ரிசாட் பதுர்டீனின் அணியினருமே முக்கிய காரணகர்த்தாவாக உள்ளர்களே தவிர, முஸ்லிம் காங்கிரசின் போராலிகளும் ,முகியஸ்தர்களும் இந்த பிரச்சினையை பெரிது படுத்தவுமில்லை, எங்களுக்கு இது ஒரு பிரச்சனையாகக் கூட தென்படவும் இல்லை.
அஹமட் இர்ஸாட்:- வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் உங்களுக்கு வழங்கப்படுமா?
உறுப்பினர் தவம்:- அல்லாவைத் தவிர வேறு யாரும் எனக்கு போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை தரவும் முடியாது, வெற்றியடைவதும் தோல்வியடைவதும் அவன் கையிலேயே உள்ளது.
நன்றி- ஓட்டமவடி அஹமட் இர்ஸாட்


0 Comments