Subscribe Us

header ads

சுகமான யானை மசாஜ் (PHOTOS)


தாய்லாந்து, சபாரி பூங்காவொன்றில் நடத்தப்படும் 'யானை மசாஜ்' தற்போது பிரபலம் அடைந்துவருகின்றது. இந்த மசாஜுக்காக பயிற்றுவிக்கப்பட்ட யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. தாய்லாந்து (உள்)நாட்டவர்களும் உல்லாச பயணிகளாக வருகைத் தருவோரும் இந்த 'யானை மசாஜ்'ஜினால் பெரிதும் கவரப்பட்டிருக்கின்றார்கள்.

'யானை மசாஜ்' தேவைப்படுபவர்கள் தரையில் கிடையாக படுக்கவைக்கப்படுவார்கள். யானைப் பாகனின் சமிஞ்சைக்கு தரையில் கிடப்பவரின் இடுப்பு, முதுகு, பாதம் ஆகிய பகுதிகளை தனது தும்பிக்கையினாலும் காலினாலும் மிருதுவாக அழுத்தும்.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பெற்றுக்கொள்ளும் மசாஜ் ஆயினும் யானை மசாஜுக்காக பலர் வரிசையில் காத்திருப்பதை தினமும் காணலாம்.

ஒளிப்படங்கள்: இயன் மெக்லீன் (அமெரிக்க உல்லாசப் பயணி)

செய்தி மூலம்: லங்காதீப (சிங்களம்)

http://www.lankadeepa.lk/index.php/articles/293481 (இந்த இணைப்பைத் திறந்து மேலும் பல படங்களை பார்வையிடலாம்) 

தமிழில்: Hisham Hussain, Puttalam

நன்றி -The Puttalam Times-



Post a Comment

0 Comments