Subscribe Us

எகிறும் எதிர்பார்ப்பு: அசத்த தவறும் அப்ரிடி, ஜெயவர்த்தனே


நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் அனுபவ வீரர்கள் மீது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
சில மூத்த வீரர்களான மிஸ்பா, யூனிஸ்கான், சங்கக்காரா, ஜெயவர்த்தனே, வெட்டோரி, அப்ரிடி ஆகியோர் இந்த உலகக்கிண்ணத் தொடரில் சொபிக்க தவறி வருகின்றனர்.
இதில் ஜெயவர்த்தனே (இலங்கை), அப்ரிடி (பாகிஸ்தான்), வெட்டோரி (நியூசிலாந்து) ஆகியோருக்கு இது 5வது உலகக்கிண்ணத் தொடராகும்.
இவர்கள் 1999, 2003, 2007, 2011 உலகக்கிண்ண போட்டித் தொடர்களில் பங்கேற்றதோடு, நடப்பு போட்டியிலும் களமிறங்கியிருக்கின்றனர்.
இதற்கு முன், இம்ரான்கான், வாசிம் அக்ரம், இன்சமாம் (பாகிஸ்தான்), ரணதுங்கா, அரவிந்த டிசில்வா, ஜெயசூரியா, முரளிதரன் (இலங்கை), லாரா, சந்தர்பால் (மேற்கிந்திய தீவுகள்), பொண்டிங் (அவுஸ்திரேலியா), காலிஸ் (தென் ஆப்பிரிக்கா), ஸ்டீவ் டிகாலோ, தாமஸ் ஒடோயா (ஜிம்பாப்வே) ஆகியோரும் 5 உலகக்கிண்ணத் தொடர்களில் விளையாடி இருந்தனர்.
இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (1992, 1996, 1999, 2003, 2007 2011), பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவித் மியாண்டட் (1975, 1979, 1983, 1987, 1992, 1996) ஆகிய இருவரும் தான் அதிகபட்சமாக 6 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடிய சாதனைக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.

Post a Comment

0 Comments