Subscribe Us

கத்தாரில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஈஸ்டன் பேர்ள்ஸ் கிரிக்கெட் கழகம் சம்பியன்

இலங்­கையின் கிழக்கு மாகா­ணத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஈஸ்டர்ன் பேர்ள்ஸ் (Eastern Pearls) சமூக அமைப்பு மற்றும் கிரிக்கெட் கழ­கத்தின் இரண்டு வருட நிறை­வை­யொட்டி ஈஸ்டன் பேர்ள்ஸ் கிரிக்கெட் கழ­கத்­தினால்  கத்­தாரின் டோஹா நகரில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கிரிக்கெட் சுற்­றுப்­போட்­டியில்   ஈஸ்டன் பேர்ள்ஸ் கிரிக்கெட் கழகம் 2015 ஆம் ஆண்­டுக்­கான சம்­பி­ய­னாக தெரிவு செய்­யப்­பட்­டது.
தலா 10 ஓவர் போட்­டி­களைக் கொண்ட இத்­தொ­டரில்  16 அணிகள் கலந்து கொண்­டன.  இறுதிப் போட்­டிக்கு ஈஸ்டன் பேர்ள்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் சிலோன் ஸ்டார் விளை­யாட்டுக் கழகம் ஆகி­யன தகுதி பெற்­றன. இதில் 141 ஓட்­டங்­க­ளினால் ஈஸ்டன் பேர்ள்ஸ் கழகம் வென்­றது.
 கடந்த சனிக்­கி­ழமை கத்தார்  அல்- ஸாத் (மைதா­னத்தில் நடைபெற்ற இறுதிப் போட்­டியில்  முதலில் துடுப்­பெ­டுத்­தாட பணிக்­கப்­பட்ட ஈஸ்டன் பேர்ள்ஸ் அணி­யினர் 16 ஓவர்­களில் 8 விக்கெட் இழப்­புக்கு 260 ஓட்­டங்­களைப் பெற்­றனர்.
 ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக கள­மி­றங்­கிய ‪ ஆசாத் மற்றும் பாயிஸ் ஆகியோர் சிறப்­பான ஆரம்­பத்தை பெற்றுக் கொடுத்­தாலும் ஆசாத் துர­திஷ்­ட­வ­ச­மாக 17 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். மறு­பக்­கத்தில் ‪சூ‎பாயிஸ் அதி­ர­டி­யாக ஓட்­டங்­களைக் குவித்துக் கொண்­டி­ருந்தார். அதன் பின்னர்  ரிபான் 13 ஓட்­டங்­களைப் பெற்று தனது விக்­கட்டை பறி­கொ­டுக்க அடுத்து கள­மி­றங்­கிய‪ சிபான் 13 பந்­து­களில் 33 ஓட்­டங்­களை பெற்றார்.
மறு­மு­னையில் சிறப்­பாக ஆடிக் கொண்­டி­ருந்த‪ ‎பாயிஸும் 27 பந்­து­களில் 66 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க அதற்­க­டுத்து ஆட வந்த ‪ஹக்கீம் அதி­ர­டி­யாக 17 பந்­து­களில் 47 ஓட்­டங்­களைப் பெற்றார்.  261 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்­பெ­டுத்­தாட கள­மி­றங்­கிய சிலோன் ஸ்டார் அணி­யினர் ‪ஹமீஸ் வீசிய முதல் ஓவ­ரி­லேயே 5 ஓட்­டங்­க­ளுக்கு இரண்டு விக்­கெட்­களை இழந்து தடு­மா­றினர்.
 அவ்­வணி சார்பில் ‪‎ரிசாட் மாத்­திரம் அதி­ர­டி­யாக ஆடி 48 ஓட்­டங்­களைப் பெற்றார். ஏனையோர்  ஈஸ்டன் பேர்ள்ஸ் அணி­யி­னரின் பந்து வீச்­சுக்கு முகம் கொடுக்க முடி­யாமல் விரை­வாக ஆட்­ட­மி­ழக்க இறு­தியில் 8.4 ஓவர்­களில் 119 ஓட்­டங்­க­ளுடன் சலக விக்­கெட்­க­ளையும் இழந்­தது அவ்­வணி. ஈஸ்டன் பேர்ள்ஸ் அணி­யினர் சார்பில் ஹமீஸ், ஆசாத் தலா 3 விக்­கெட்­களை வீழ்த்­தினார்.
 இத் தொடரின் இறுதிப் போட்­டிக்கு பிர­தம அதி­தி­யாக கல்­முனை ஹொலிபீல்ட் விளை­யாட்டுக் கழகத் தலைவர் எம். எம்.‪ ஜெஸ்­மினும் கௌரவ அதி­தி­க­ளாக ஈஸ்டன் பேர்ள்ஸ் அமைப்பின் ஆலோ­ச­கர்­களில் ஒரு­வ­ரான ‪‎யாசிர் அலியார், பதில் தலைவர் எம்.ஐ.எம். ‪பைஸால், பீ.எம். ரிசாட் மற்றும் அமைப்பின் ஏனைய முக்­கி­யஸ்­தர்­களும் கலந்து கொண்­டனர்.
 இத் தொடரில் சம்­பி­யன்­க­ளாக தெரிவு செய்­யப்­பட்ட ஈஸ்டன் பேர்ள்ஸ் கிரிக்கெட் கழ­கத்­துக்கு பிர­தம அதிதி எம்.எம். ஜெஸ்­மினால் வெற்றிக் கிண்­ணமும், பணப்­ப­ரிசும் அணித் தலைவர் ஏ.சி.எம் முபீ­னிடம் வழங்­கப்­பட்­டது.
 மற்றும் ஏனைய திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கான விருதுகளை அமைப்பின் ஆலோசகர் சூயாசிர் அலியார், பதில் தலைவர் எம் .ஐ. எம்.‪சூ‎பைசால், ‪ஸஜாத் காசிம், பீ.எம். ரிசாட் மற்றும் அப்துல்‪ ‎சலாம் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.

8854ep-2
8854ep-1

Post a Comment

0 Comments