Subscribe Us

நண்பனை கொன்று பிணத்துடன் செல்ஃபி: இது வெறும் ஆரம்பம் தான்…


அமெரிக்காவில் இளைஞன் ஒருவன், தன்னுடன் பழகிய நண்பனை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு பிணத்துடன் செல்ஃபி எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வானியா (Pennsylvania) மாகாணத்தை சேர்ந்த மேக்ஸ்வெல் (Maxwell Marion Morton – age 16) என்ற இளைஞன், தன்னுடன் பழகிய ரியான் மார்டன் (Ryan Mangan – age 16 ) என்ற இளைஞனை அவரது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளான்.

அதன் பிறகு இறந்த உடலை அமர வைத்து அதனுடன் சிரித்துக்கொண்டு செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளான்.

அந்த புகைப்படத்தை தனது நண்பர்களின் கைப்பேசிகளுக்கு அனுப்பிய அவன், ‘ரியானை கொன்றது வெறும் ஆரம்பம் தான்’ என்ற கொடூரமான செய்தியையும் பகிர்ந்துள்ளான்.

இவ்வாறு பகிரப்பட்ட புகைப்படத்தை, நண்பர்களின் ஒருவனது தாயார் பார்த்துவிட்டு, பொலிசிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் புகைப்படத்தில், முகத்தில் துப்பாக்கி குண்டு காயம்பட்டு இறந்திருப்பது அங்குள்ள ஜீனேட் (Jeannette) பள்ளியை சேர்ந்த ரியான் என்றும் பிணத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டவன் அதே பள்ளியை சேர்ந்த மான்கன் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், ரியானை கொன்றதை மார்டன் ஒப்புக்கொண்டதால் அவனை கைது செய்த பொலிசார் கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments