Subscribe Us

பாகிஸ்தானிலிருந்து ஆப்கானியர்கள் தாய்நாட்டுக்கு


பாகிஸ்தானிலிருந்து பதிவுசெய்யப்படாத ஆப்கானியர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 24 ஆயிரம் ஆப்கானியர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளதாக ஐஓஎம் என்ற குடிபெயர்வு தொடர்பான சர்வதேச ஸ்தாபனம் கூறியுள்ளது.
இந்த எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் சொந்த நாட்டுக்குத் திரும்பியவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு சமமானது.
பாகிஸ்தானின் வடமேற்கே பெஷாவர் பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் கடந்த டிசம்பரில் தாலிபன் நடத்திய படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் வசித்த ஆப்கானியர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே குழப்பங்கள் அதிகரித்தன.
இதனையடுத்தே அப்பகுதியிலிருந்து ஆப்கானியர்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேறியுள்ளதாக ஐஓஎம் கூறுகின்றது.
பாகிஸ்தானில் சுமார் 30 லட்சம் ஆப்கானியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் சுமார் 10 லட்சம் பேர் வரையில் பதிவில் இல்லை. அதாவது அவர்களுக்கு அகதி அந்தஸ்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments