Subscribe Us

நான் இராஜினாமாச் செய்தும் என்னை மக்கள் தேடிவருகின்றனர்


மேல்மாகாண ஆளுணராக பதவிவகித்த அலவி மொளலானா கடந்த ஜனவரி 19ஆம் திகதியே தமது பதவியினை ராஜினமாச் செய்துள்ளார். 

சகல மாகாணங்களின் ஆளுணர்களும் பதவி விலகும்படி புதிய அரசாங்கம் கேட்டதற்கிணங்கவே தானும் இராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆனால் பொதுமக்கள் மேல் மாகாண ஆளுணர் அலுவலகத்திற்கு நாளாந்தம் சென்று அலவி மௌனாவைத் தேடிவருவதாக. தெரிவிக்கப்படுகின்றது. தானும் தனது தனிப்பட்ட சகல அதிகாரிகளும் விலகிவிட்டதாக பொது மக்களுக்கு அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர் என மேல் மாகாண ஆளுனர் அலவி மொளலானா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்ரப் ஏ சமத்

Post a Comment

0 Comments