அண்மைக் கால அரசியல் அரங்கில் என்ன விளையாட்டு நடைபெறுகின்றது என்று
சிறிதேனும் கூட யூகிக்க முடியாத அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.அந்த
வகையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாரூக்,அலி சாகிர் மௌலான ஆகிய
இருவரும் மு.கா இன் பக்கம் தங்கள் அரசியல் வாகனத்தினை திருப்பி மு.கா போட்ட
அரசியல் வீதியில் பயணிக்க முடிவு செய்துள்ளனர்.இதனை அவர்கள் உத்தியோக பூர்வமாக
அறிவிப்பதில் சில சட்டப் பிரச்சினை இருப்பதால் அதனை உத்தியோக பூர்வமாக அறிவிக்க
வில்லை எனவும் அவர்கள் மு.கா பக்கம் சார்ந்தமையினை மு.கா உயர் மட்டங்கள் உறுதியும்
செய்கின்றன.
சிப்லி பாரூகினைப் பொறுத்த மட்டில் காத்தான்குடியில் முன்னாள் பிரதி
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினை எதிர்த்து இவ் புதிய ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த
முயன்றவர்களில் முதன்மையானவர்.இப் புதிய ஆட்சி மாற்றத்தில் ஒரு சிறு வித பங்கும்
முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு கிடையாது.பசீர் சேகு தாவூத் கட்சியின்
முடிவுகளினை ஏற்காது போனாலும் கட்சியின் எதிர்க் காமல் நடைபயின்றார்.ஆனால்,ஹிஸ்புல்லாஹ்
அ.இ.ம.கா இன் முடிவினை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் நடந்தார்.எவ்வாறு இன்று பாராளுமன்ற
உறுப்பினர் பசீரினை மு.கா புறக்கணித்து அவரினை அரசியலினை விட்டும் அப்புறப்
படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறதோ அதனை விட பன் மடங்கு அதிகம் ஹிஸ்புள்ளஹ்வினை
அப்புறப்படுத்துவதில் அ.இ.ம.கா தனது செயத்திட்டங்களினை முன்னெடுத்திருக்க
வேண்டும்.ஆனால்,முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவினை மீண்டும் கட்சியினுள் உள் வாங்கி தனது அரசியல்
பயணத்தினை அ.இ.ம.கா தொடர்வது அதன் இயலாமையினைத் தான் சுட்டிக் காட்டுகிறது.
ஹிஸ்புல்லாஹ் வினை எதிர்த்து ஒரே அணியில் இருந்து கொண்டு
காத்தான்குடியில் மாகாண சபை உறுப்பினர் சிப்லியினால் அரசியல் செய்ய
முடியாது.பொதுவாக ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் தனக்கு சார்பான அரசியல்
வாதிகளினையே நிலைக்கச் விடுவார்.இது
அரசியல் வாதிகளின் பொதுவான ஒரு பண்பும் கூட.இத் தேர்தல் காலத்தில் ஹிஸ்புல்லாஹ்
விற்கெதிராக சில வேலைகளை செய்த படியினால் இவரினை அடுத்த முறை அப்புறப்படுத்தும்
முயற்சியில் களமிறங்குவார் என்பதனை முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா நன்கே
சிப்லி அறிவார். முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா விடம் நடைபெற்று முடிந்த
தேர்தல் காலப்பகுதியில் சில சாவால்களினையும் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்
விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதன் பின்பு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்
ஹிஸ்புல்லாவுடன் இணைந்து செயல்படுவது மக்களிடம் தன்னை ஒரு கேவலமான அரசியல் வாதியாக
சித்தரிக்கும் ஒன்று என்பதனியும் மறுக்க முடியாது.
எனவே,இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது ஒன்று அ.இ.ம.கா முன்னாள்
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா வைத்திருக்க வேண்டும் அல்லது மாகாண சபை உறுப்பினர்
சிப்லி பாரூக்கினை வைத்திருக்க வேண்டும்.வாக்கினைப் பார்த்தால் ஹிஸ்புல்லாவினை
வைத்திருப்பதே அ.இ.ம.கா இற்கு ஏற்புடையது.எனினும்,நியாயப்படி பார்த்தால்
சிப்லியினை கட்சியில் வைத்திருக்க வேண்டும்.அ.இ.ம.கா ஹிஸ்புல்லாவிற்காக மாகாண சபை
உறுப்பினர் சிப்லியினை எதிர்ப்பது அ.இ.ம.கா இனது தெளிவான சுய நலத்தினை சுட்டிக்
காட்டுகிறது.முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா ருசிக்க நன்றாக இருந்தாலும் உடலிற்கு
தீங்கு பயக்கக் கூடிய சுவையூட்டிகளால் சுவையூட்டப்பட்ட ஒரு உணவு இதன் மூலம் நாவு
சுவையை உணர்ந்தாலும் உடலிற்கு பாதகத்தினை விளைவிக்கக் கூடியது.இதன் ருசியை உணரும்
நாவினது இயக்கம் கூட இதன் விளைவால் சில நாட்களில் இயக்கத்தினை இழக்கும்.சிப்லி
பாரூக்கோ ருசிக்க நன்றாக இல்லாவிட்டாலும் சத்துணவு இதன் பலா பலன்கள் சில
வருடங்களின் பின்பே அறிவர்.
தற்போது தீங்கு பயக்கக் கூடிய சுவையூட்டிகளால் சுவையூட்டப்பட்ட உணவினை
காட்டி மக்களினை தங்கள் வசப்படுத்தி மக்களிற்கு சத்துணவின் பெறுமதியினை உணரச்
செய்து அதன் பிற் பாடு சத்துணவின் பால் மக்களினை திருப்பும் உத்தியோடு அ.இ.ம.கா
இருந்தாலும் மாகாண சபை உறுப்பினர் சிப்லியினது அரசியள் வாழ்வினையும் தற்போது
கருத்திற் கொள்ள வேண்டிய தேவை உள்ளதல்லவா?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.


0 Comments