-Nafees Basha-
பெப்ரவரி மாதம் வருகின்ற 14 ஆம் திகதி சர்வதேச ஒரு நாள் உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பமாக உள்ள நிலையில் இலங்கையும் இந்த்தொடரில் ஒரு முக்கிய நாடாக உள்ளது என்பது உலகரிந்த விடயம். அத்தோடு இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூ சீலாந்து, தென் ஆப்ரிகா, மேற்கு இந்தியத்தீவு மற்றும் சில அணிகளுடன் அரபு நாட்டு அணிகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளும் இதில் பங்குபற்றுவது அனைவரும் அறிந்தது.
இது தொடர்பாக எந்த அணிக்கு ஆதரவு வழங்குவது என்பது ஒவ்வொருவரதும் சுய விருப்பம் என்ற நிலையிலும் அந்தந்த நாட்டவர்கள் தமது சொந்த நாட்டிற்கே தமது பூரண ஆதரவை வழங்கும் நிலையில் இலங்கையில் மாத்திரம் முஸ்லீம்களில் சிலர் இந்த விடயத்தில் தமது ஆதரவை வழங்க அரபு நாடுகளை தேடுவது இலங்கை வாழ் மக்களுக்கு ஒரு கசப்பான ஒரு விடயமாகவே அமைவது மாத்திரமின்றி மத வெறியர்களின் கண்ணிற்கு இவ்விடயம் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு ஒரு உறுத்தலாக இருக்கின்றது.
அதன் பட்டியலில் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு தமது ஆதரவுகளை வழங்குவதில் 1992 ஆம் ஆண்டு முதல் எமது முஸ்லீம்களில் சிலர் பகிரங்கமாகவே செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால் இவ்வாறான முஸ்லிம்கள் வருகின்ற காலங்களில் பகிரங்கமாக பாகிஸ்தான் அணிக்கு தமது ஆதரவுகளை வழங்கினால் சிங்கள இனவாதிகலால் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை இதுவும் ஒரு கேள்விக்குறியாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
காரணம்; இலங்கை அணியை வீழ்த்தும் பலம் கொண்ட அரபு நாட்டு அணி பாகிஸ்தான் என்பதே மிகப்பெரிய விடயமாகும்.
இலன்கை முஸ்லிம்களின் அரக்கன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோற்றவுடன் முஸ்லிம்களுக்கு விடிவு காலம் வந்து விட்டது என்பது முஸ்லிம்களில் பலரின் எண்ணம். காரணம் பொது பல சேனா என்ற அமைப்பை முஸ்லிம்களின் அரக்கன் மகிந்த ராஜபக்சவின் சகோதரன் கோத்தாபே ராஜபக்ச தான் உருவாக்கினான் என்பதற்காக.
இவ்வமைப்பை கோத்தபய ராஜபக்ஸ உருவாக்கினாலும் முஸ்லிம்களின் விஷமிகளான ஜாதிக ஹெல உறுமய என்னும் கட்சி இந்த அமைப்பு உருவாக முன்னே உருவாகியதும் தற்கால அரசுடன் இணைந்து செயற்படுவதும் அறிந்தது.
அதுமட்டுமல்லாது இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வெற்றிக்கு இக்கட்சி பாரிய ஒரு உந்துதலாக இருந்ததும் மறுக்க முடியாத ஒன்று. ஆனால் இந்த சென்ற இரண்டு வருட காலமாக முஸ்லிம்களுக்கு இளைத்த அநீதிகளிலும் இக்கட்சி பங்கேற்க தவறவில்லை.
முஸ்லிம்கள் சம்மந்தமான பொய்ப்பிரசாரம் மேற்கொண்டது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் சம்மந்தமான பொய்யான ஒரு புத்தகத்தையும் இக்கட்சி செயலாளர் சம்பிக்க ரணவக்கவினால் வெளியிடப்பட்டது.
ஆகவே தற்கால அரசு வன்முறைகளுக்கும் அநீதிகளுக்கும் இடமளிக்காது என்று கூறினாலும் இந்த கட்சியின் கோட்பாடுகளினாலும் வட்புருத்தல்களினாலும் இந்த அரசும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் அநீதிகளுக்கும் இடமளிக்க நேரிடலாம்.
ஆகவே இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் மிகவும் நிதானமாகவும் அவதானமாகவும் செயற்பட வேண்டி உள்ளது.
எனவே நாம் வருகின்ற இந்த சர்வதேச ஒரு நாள் உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் இலங்கை அணிக்கு ஆதரவளிக்கவில்லை என்றாலும் அரபு நாட்டு அணிகளுக்கு குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு பகிரங்கமாக வழங்கும் ஆதரவுகளை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
அவ்வாறு பாகிஸ்தான் அணி சம்மந்தமான வீடியோ,புகைப்படங்களை facebook மற்றும் மற்ற இணையத்தளங்களில் பகிர்வதும், upload செய்வதும். பாகிஸ்தான் அணியின் உடைகளை (JC) அணிந்து facebook இல் போட்டோ போடுவதும். பாகிஸ்தான் அணியின் உடைகளை (JC) அணிந்து பொது இடங்களில் நடமாடுவதும், பாகிஸ்தான் அணி வென்றதும் பட்டாசு வெடிப்பதும் முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்தோடு இந்த சுற்று போட்டிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் பொதுமக்களான எமக்கு எந்த ஒரு நன்மையும் நடக்கப்போவதில்லை என்பது உறுதி.
இதையும் மீறி நீங்கள் பாகிஸ்தான் அணிக்கு காட்டும் ஆதரவை பகிரங்கமாக செய்தால் இதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு அல்லாஹ்விடம் நிச்சயமாக பதில் சொல்ல வரும். காரணம் இஸ்லாத்தில் முதலில் சொந்த நாட்டை கருத்தில் கொண்டே செயற்பட வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
நீங்கள் செய்யும் இந்த வேலையாள் நாளை உங்களது குடும்பங்களே பாதிப்புக்குலாகலாம், உங்கள் சகோதரர்களது கடைகள் மற்றும் வியாபார தளங்களே தீ வைக்கப்படலாம். உங்களது உம்மா, வாப்பா, மற்றும் சகோதரிகளே hospital, bus, மற்றும் பொது இடங்களில் அநீதிக்கு உட்படுத்தப்படலாம். பேருவளை, அளுத்கமை பகுதிகளில் முஸ்லிம்களுக்கு நடந்த அநீதிகளை தட்டிக்கேட்க எந்த ஒரு பாகிஸ்தானோ, பாகிஸ்தான் அணி வீரர்களோ வரவில்லை.
ஆகவே இதை அனைத்தும் கருத்தில் கொண்டு சிந்தித்து செயல்படுவோம். இதை சமூக நன்மைக்காக அனைவருக்கும் share செய்யுங்கள்.நம் எல்லோருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.
(இது சமூகத்திற்காக என்னால் முடிந்த ஒரு சின்ன கட்டுரை. உங்களால் முடிந்தால் அல்லாஹ்வுக்காக இதை Share செய்து மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அல்லாஹ் அருள் புரிவான்)


0 Comments