சம்பந்தன், சம்பிக்க, அனுர குமார திஸ்ஸா நாயக்க போன்றோர் எரிக் சொல்ஹய்ம்க்கு தேவைப்பட்டதை செய்துள்ளார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாங்கள் வெற்றியடைந்துள்ளோம் என்றும், ராஜபக்சவை நாங்கள் துரத்தி விட்டோம் என்றும் எரிக் சொல்ஹய்ம் கூறுகிறார். அப்படி என்றால் ராஜபக்சவை விரட்டியது எரிக் சொல்ஹய்மா?.
சொல்ஹய்ம்க்கு தேவைபட்டுள்ளதே அனுர குமார திஸ்ஸா நாயக்கவுக்கும், சம்பந்தனுக்கும், சம்பிக்கவுக்கும் தேவைபட்டுள்ளது.
அப்படி என்றால் உண்மையில் அவ்வாறான ஒப்பந்தத்தை இவர்களே செய்துள்ளார்கள் என விமல் வீரவன்ச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.


0 Comments