Subscribe Us

header ads

ஹர்த்தால் அழைப்பு விடுத்தவர்கள் அறிவாளிகளா..? அறிவிலிகளா..?


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முதலமைச்சினை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்காமல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கியதற்கு எதிராக இன்று 26-02-2015 மு.கா இனது தலைவர் ஹக்கீமிற்கு எதிராக அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஸ்டிகுமாறு இனம் தெரியாதோரினால் துண்டு பிரசுரங்கள் பள்ளிவாயல்களுக்கும்,மக்கள் மத்தியிலும் பகிரப் பட்டிருந்தது.

உண்மையில் இவ் ஹர்த்தால் நடைபெறாது என்பதனை நன்கு அறிந்த மு.கா ஆதரவாளர்கள் இதனை பெரிதாக அலட்டிக் கொள்ளாத போதும் இவர்கள் நடாத்தாமையினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மு.கா கட்சியிற்கு எதிராக எதுவும் செய்து விட முடியாது என்ற பிரச்சாரத்தினை மேற்கொண்டு தங்கள் கட்சியினை மேலும் வளர்ப்பதில் முனைப்புக் காட்டுகிறார்கள்.

நன்கு திட்டமிட்டாலும் மு.கா இற்கு எதிராக ஹர்த்தால் அனுஸ்டிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல எனும் போது இனம் தெரியாதோரினால் நடாத்துவது சாத்தியம் அற்ற ஒன்று என்பதனை சிறு பிள்ளையும் அறியும்.அப்படியானால் இவர்கள் நோக்கம் தான் என்னவாக இருக்கும்..??

மு.கா இனது முதலமைச்சு நியமிப்பானது அம்பாறை மாவட்ட ஆதரவாளர்களிடையே அதிருப்தியினை ஏற்படுத்தி இருந்தது.இச் சர்தர்ப்பத்தில் இவ்வாறான செயற்பாடுகளினை முன்னெடுக்க வேண்டும் என்று அவா கொண்டுள்ள மக்களுக்கு ஒரு ஏதாவது ஒரு தூண்டு கோல் வேண்டும்.இதற்கு இவ்வாறான செயற்பாடு பெரிதும் துணை நிற்கும்.

அப்படியானால் ஏன் யாரும் கொந்தளிக்கவில்லை..??

உண்மையில் முதலமைச்சு நியமிக்கப்பட்ட அக் காலப்பகுதியில் மக்கள் கொதித்தாலும் அதன் பிற்பாடு யாவரும் அமைதியாகி விட்டனர்.கொதித்தவர்கள் மு.கா ஆதரவாளர்கள் என்பதனை விட குறித்த நபர்களினது ஆதரவாளர்கள் என்பது தான் உண்மை.இதனை ஏற்பாடு செய்தவர் மு.கா அல்லாதோர் என்பதனால் களத்தில் அவர்கள் இறங்கும் போது இவ் விடயத்தில் மு.கா மீது  வெறுப்புக் கொண்ட ஆதரவாளர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.எனவே,இவ் ஹர்த்தால் எவ்வாறு சாத்தியமாக போகிறது? மேலும்,ஒரு ஹர்த்தால் சாத்தியமாவதற்கு பொது மக்களின் ஆதரவுகள் தேவை,இவ் ஏற்பாடு சுயநலத்தின் பிரதிபலிப்பு தவிர வேறில்லை என்பதனை அறியாத அளவு பொது மக்கள் ஒன்றும் அறிவிலிகள் அல்ல.மேலும்,இவர்களுக்கு பதவி கொடுக்க வில்லையாம் என்று போர்க்கொடி தூக்கும் அளவு பொது மக்களிற்கு அரசியல் வாதிகளின் மீது பற்றும் அல்ல.அப்படியிருக்க அம்பாறைக்கு கொடுத்தால் தான் என்ன? மட்டக்களப்பிற்கு கொடுத்தால் தான் மக்களுக்கு என்ன?

இம் முயற்சிக்கு ஊடகங்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை இது நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று என்பதற்கு போதுமான சான்றாகும்.இன்று மு.கா இனை உளவியல் ரீதியாக மக்கள் மனங்களில் இருந்து அகற்ற பல்வேறான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.முதலைச்சு விடயத்தில் சலிப்புற்றிருக்கும் மக்களினை அதே நிலையில் பேணுவதற்கும்,வெறுப்பினை சிறிது சிறிது அதிகரிப்பிற்கு இவ்வாறான செயற்பாடுகள் நல்லதொரு அடித்தளத்தினை வழங்கும்.அம்பாறையில் அல்லாவிட்டாலும் ஏனைய இடங்களில் “அம்பாறையில் மு.கா அன்று ஆர்ப்பாட்டம் இன்று ஹர்த்தாலமே” என்று மு.கா மீது சேறு பூசுவதற்கு அழகிய காரணியாக இது அமையும்.


எனினும் மு.கா இற்கு எதிராக இன்று சேறு பூச பலரும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்ற இன் நிலையில் இவ் ஹர்த்தாலினை பாரிய அளவில் செய்யா விட்டாலும் நான்கு ஐந்து டயர்களினை எரித்து இருந்தால் நடக்குமா? என்று எதிர்பார்த்து இருந்த மக்களிடையே  ஒரு பதட்டமான சூழ் நிலையினை உருவாகி இருக்கும்.டயர்கள் நான்கு எரிந்தால் அதனை சுற்றி   நாலு மக்கள் கூடுவார்கள்.அதனை புகைப்படம் பிடித்து மக்களிடையே வெளிப்படுத்தி இருந்தால் இன்று ஊடகங்கள் மு.கா மீது கொண்டிருக்கும் வெறுப்பில் அதனை ஊதிப் பெருப் பித்து மு.கா மீது பாரிய சேறு பூசலினை அவர்கள் மேட்கொண்டிருக்க சிறந்த ஒரு காரணி விளைவாகி இருக்கும்.இதனைச் செய்ய இவர்கள் தவறி விட்டு விட்டார்கள என்பதனை விட இதனைச் செய்ய துணிவில்லை என்பதே உண்மை.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை

இலங்கை.

Post a Comment

0 Comments