உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் க்ஷனிகா ஹிரிபுரேகமவை ராஜினாமா செய்யுமாறு சில தரப்பினர் அண்மையில் வலியுறுத்தியிருந்தனர். இதன் காரணமாக ரஜீவ விஜேசிங்க அதிருப்தியடைந்திருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ரஜீவ விஜேசிங்க, உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹசீமுக்கு தெரியப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவியை ராஜினாமா செய்தமை தொடர்பில் ரஜீவ விஜேசிங்க இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments