மத்திய மலைநாட்டின் கண்டி, தலவத்தையைச் சேர்ந்த மஹேஷ் பண்டார, வயது 33, ஹெலிகொப்டர் ஒன்றை வெற்றிகரமாக தயாரித்துள்ளார். பாடசாலைப் பருவம் முதல் பைசிக்கிள், மோ.சைக்கிள், முச்சக்கர வண்டி போன்வற்றைத் திருத்துவதில் பிறவித் திறமையைக் காட்டியுள்ள மஹேஷ், தனது சிறு பராயக் கனவான ஹெலிகொப்டர் தயாரிப்பை இன்று நனவாக்கியுள்ளார்.
மோட்டார் வாகனங்களின் இயந்திரம், உதிரிப் பாகங்களைக்கொண்டு சுயமாகத் தயாரித்த இந்த ஹெலிகொப்டரின் ஒவ்வொரு பாகத்தையும் தனது சொந்த வடிவமைப்பில் தயாரித்துள்ளார். இதன் பாகங்கள் சுமார் 10,000 அடி உயரம் பறக்க்கூடிய அளவு சிறந்த தரத்தில் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
இயந்திர தொழிநுப்டவியலாளனாக (Motor Mechanic) சுய தொழில் புரியும் மஹேஷ், தனது அன்றாட உழைப்பின் பெரும்பகுதியை ஹெலிகொப்டர் தயாரிப்புக்காக செலவிட்டதாகவும் தன் முயற்சிகளுக்கு மனைவி சுதர்மா பிரியதர்ஷனீ வழங்கும் ஒத்துழைப்பை மனம் திறந்து பாராட்டுவதாகவும் கூறினார்.
இவ் ஹெலிகொப்டரின் தரத்தை மேம்படுத்துவதற்காக நன்கொடையாளரின் உதவியை நாடுகின்றார். இத் திறமையாளனுக்கு உதவ விரும்புவோர் கீழ் இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.
தொலைபேசி: 072 841 3677
மின்னஞ்சல்: mahesh.prabath@gmail.com
மூலம்: லங்காதீப (சிங்கள ஊடகம்)
நன்றி -TPT-


0 Comments