பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதமர் நாடாளுமன்றில் கௌரமாக நடந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றில் பிரதமர் நடந்து கொண்ட விதத்தை எதிர்க்கட்சியினர் அனைவரும் கண்டிக்கின்றோம்.
சிறுபான்மை அரசாங்கமொன்றே தற்போது காணப்படுகின்றது. தேவை ஏற்பட்டால் 24 மணித்தியாலத்தில் அனைவரினதும் அமைச்சுப் பதவிகளை எம்மால் பறிக்க முடியும். பெரும்பான்மை பலம் எம்மிடமே காணப்படுகின்றது.
அடி வாங்கிக் கொண்டு நல்லாட்சி ஆதரவளிக்க வேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது என மஹிந்தானந்த அலுத்கமகே நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பிரதமர் பதிலளித்த விதம் தொடர்பில் மஹிந்தானந்த அலுத்கமகே இவ்வாறு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.


0 Comments