Subscribe Us

header ads

அரை இறுதிக்கு தகுதிபெற இந்தியாவால் முடியாது: ஹஸி


என்னை பொறுத்தமட்டில் இந்த உலக கிண்ணத்தில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம்.அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பதே எனது கணிப்பாகும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்டவீரர் மைக் ஹஸி  தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி யின் முன்னாள் துடுப்பாட்டவீரர் மைக் ஹஸி அளித்த ஒரு பேட் டியில் ‘இந்திய அணி உத்வேகம் நிறைந்ததாகும். அணி யில் திறமையான வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர்.
இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக விளங்கும் காலம் விரைவில் வரும். என்னை பொறுத்தமட்டில் இந்த உலக கிண்ணத்தில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம்.அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன் னேறும் என்பதே எனது கணிப்பாகும்.

உலக கிண்ணத்தை வெல்ல அவுஸ்தி ரேலிய அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் சிறப்பான அணி கள் உள்ளன. எந்த அணி வெற்றி பெறும் என்று கணிப்பது முடியாத காரியமாகும்’ என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments