டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 65 தொகுதிகளிலும் பாரதீய ஜனதாக் கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.70 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலில் 673 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு, 67.14 வாக்குகள் பதிவாகியிருந்தன.நடந்து முடிந்த டெல்லி சட்டப் பேரவையின் தேர்தலுக்காக வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் இன்று காலை 14 வாக்கெண்ணும் நிலையங்களில் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments