Subscribe Us

header ads

எல்லைகளைத் தாண்டி......!


புத்தியாகம சந்திர ரத்ன தேரர் வண்ணாத்திவில்லு 17 ஆம் மைல் கல்லில் உள்ள பௌத்த பன்சலையைச் சேர்ந்தவர். புத்தளம் மக்களுடன் மிகவும் அந்நியோன்யமாக பழகுபவர். குறிப்பாக சர்வ மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் முதலானவர்களுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்பவர். இன,மத நல்லிணக்க மற்றும் சமாதான செயற்பாடுகளில் தீவிர பங்களிப்பு செய்பவர்.
சமாதான செயற்பாட்டாளரான அவரை ஓரிரு தினங்களுக்கு முன்னர் சந்திக்க கிடைத்தது. அதன் போது நமக்கு மத்தியில் சமகால பேசு பொருளாகியுள்ள பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பாக அவருடன் விலாவாரியாக பேச முடிந்தது. புத்தளத்தில் தற்போது இடம் பெறும் பல்வேறு அரசியல் நகர்வுகளைக் கேட்டறிந்து கொண்ட அவர் புத்தளம் எம்.பி. விடயத்தில் தனது அதிக பட்ச கரிசனையை வெளிக் காட்டினார்.
புத்தளம் எம்.பி.விடயத்தில் தானும் பங்களிப்பு செய்வதற்கு ஆவலுருவதாக கூறியதோடு, புத்தளத்தின் பல தரப்பாரையும் சந்தித்து, இது விடயத்தில் ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்பதாகவும் கூறினார். புத்தளம் பிரதேச பௌத்த மத தலைவர்களுடன் கலந்துரையாடுவதாகவும் கூறினார்.

-Muhusi Rahmathullah-

Post a Comment

0 Comments