விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 02.00 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் தலைமையில் நாளை பொலிஸ் தலைமையகத்தில் விஷேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வருகை தருமாறு அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments