உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் கென்பராவில் இன்று நடைபெறும் ஸிம்பாப்வே அணியுடனான போட்டியில் மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்ல் 200 ஓட்டங்களைக் கடந்துள்ளார். 147 பந்துகளில் 215 ஓட்டங்களை அவர் குவித்தார். இதன் மூலம் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் குவித்த முதல் வீரரானார் கிறிஸ் கெய்ல்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 372 ஒட்டங்களைப் பெற்றது.


0 Comments