தெதுரு ஓயாவில் குதித்து காணாமல் போனதாக கூறப்படும் பாடசாலை மாணவியின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் 15 வயதுடைய பாடசாலை மாணவன் மற்றும் மாணவி ஆகிய இருவர் தெதுரு ஓயா ஆற்றில் குதித்ததாக வௌியான தகவலை அடுத்து, பொலிஸார், கடற்படையினர் மற்றும் பொதுமக்களும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

இதன்படி மாணவனின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. 

இந்தநிலையில் மாணவியின் சடலத்தை இன்று காலை 06.30 அளவில் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.