பிரபல போதைப்பொருள் விநியோகஸ்தரான வெலே சுதாவிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய இதுவரை 75 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அரச அதிகாரிகள் மற்றும் வங்கித்துறை அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


0 Comments