ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் கூட்டம் ஒன்று அலரி மாளிகையில் நேற்று (12) இடம்பெற்றது. நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த அமைப்பாளர்களும் கட்சியின் முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.
சுமார் 160 அமைப்பாளர்களும் இதற்கு மேலதிகமாக மாவட்ட இணைப்பாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு விருந்து உபசாரம் செய்வதற்கான அனைத்துச் செலவுகளையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொண்டார்.
தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் நன்றி : லங்கா சீ நியூஸ்


0 Comments