Subscribe Us

header ads

அதிக விலைக்கு பொருட்களை விற்றால் உடன் அழைக்கும் அவசர இலக்கங்கள்



வரவு செலவுத் திட்டத்தினால் வழங்கப்பட்ட பொருள் சேவைகளுக்கான விலைக் கழிவுகளின் சலுகையை நுர்வோருக்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், குறைக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருள் சேவைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் பஸ் நடத்துனர்கள் பற்றி முறைப்பாடு செய்யும் அவசர தொலைபேசி இலக்கங்களை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. 

அவை 078 871 4926, 077 720 5131, 077 399 5943, 071 767 2807 ஆகும்.

இவ் இலக்கங்களுக்குக் கிடைக்கும் முறைப்பாடுகள் உடனடியாக அரசாங்கத்தின் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார். இவர்களுடன் அகில இலங்கை பயணிகள் போக்குவரத்துச் சங்கம் உட்பட நான்கு சங்கங்கள் இணைந்து இச் செயல்திட்டத்ததை முன்னெடுக்கின்றது. 

பொருள் சேவைகளின் விலைக் குறைப்புச் சலுகை இன்னும் அநேகமான நுகர்வோருக்குக் கிடைக்கவில்லை என்றும் ஒருசில பிரதேசங்களில் பான் (கோதுமை) மா, கேஸ் போன்றவற்றுக்கு போலியான தட்டுப்பாடு ஒன்று உருவாக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர் இவற்றைக் கண்டறிவதற்கான பொறிமுறையயொன்றை அரசாங்கம் உடனடியாக தயாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

செய்தி மூலம்: லக்பிம (சிங்கள பத்திரிகை)

நன்றி - The Puttalam Times -

Post a Comment

0 Comments